தமிழ் சினிமா செய்வது எப்படி? - செஃப் சங்கர்

ஒரு ராணுவத்தால் செய்ய முடியாததை பீட்டர் ஹெயினின் உதவியுடன் ஹீரோ ஒற்றை ஆளாக செய்து முடித்தவுடன் வாணலியை இறக்கி விட வேண்டும்.
தமிழ் சினிமா செய்வது எப்படி? - செஃப் சங்கர்

தேவையான பொருட்கள்:

மார்க்கெட்டில் உச்சத்திலிருக்கும் ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் இரண்டு வருடங்கள், ஹோல்சேல் விற்பனையில் வாங்கிய ரெண்டு லாரி பெயிண்ட்டுகள், கேள்வியே பட்டிராத வெளிநாடுகளுக்கான விசா நான்கு மாதங்கள், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 5 பாடல்கள், 200 ரோபா பொம்மைகள், பீட்டர் ஹெயினின் அதிரடி சண்டைகள் மற்றும் ஒரு டஜன் சேனல்களின் மைக்.

இயக்குனர் சங்கர்
இயக்குனர் சங்கர்

செய்முறை:

முதலில் சாதாரணமாக வளரும் ஹீரோ திடீரென்று அக்கிரமக்காரர்களை தண்டிக்கும் ஆபத்பாந்தவனாக மாறுவதற்கான வலுவான காரணத்தை சொல்லும் ப்ளாஷ்பேக்கை வாணலியில் ஊற்றி சூடேற்றி கொள்ள வேண்டும்.

கொதித்துக்கொண்டிருக்கும் போதே ஏ.ஆர்.ரகுமான் போட்டுக்கொடுக்கும் ஹிட் பாடல்களை ஆங்காங்கே மழைச்சாரலைப் போல தூவிவிட வேண்டும்.

எந்திரன் திரைப்படத்தில் ரஜினி
எந்திரன் திரைப்படத்தில் ரஜினி

ஒரு ராணுவத்தால் செய்ய முடியாததை பீட்டர் ஹெயினின் உதவியுடன் ஹீரோ ஒற்றை ஆளாக செய்து முடித்தவுடன் வாணலியை இறக்கி விட வேண்டும். இறுதியாக, கோர்ட்டுக்கு வெளியே கூடி இருக்கும் ரெண்டு லாரி துணை நடிகர்கள் தரும் கருத்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறினால் சூடான சுவையான கருத்து குத்து படம் ரெடி.

- சீலன்.

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com