அந்த காலத்துல இதெல்லாம் இருந்திருந்தா? - சிலப்பதிகாரம் டு ஜிபே

ஒருவேளை இப்போதுள்ள டெக்னாலஜி பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அந்த காலத்துல இதெல்லாம் இருந்திருந்தா? - சிலப்பதிகாரம் டு ஜிபே

ஒருவேளை இப்போதுள்ள டெக்னாலஜி பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிலப்பதிகாரம்:


எலக்ட்ரானிக் ஸ்கேனரை வைத்து ஸ்கேன் செய்து பார்த்து இருந்தால் உள்ளே இருப்பது மாணிக்க பரலா இல்லை முத்து பரலா என்று அறிந்திருக்கலாம். கோவலனோடு பாண்டிய மன்னனையும் காப்பாற்றியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையையும் காப்பாற்றியிருக்கலாம்.

கண்ணகி - பாண்டியன் நெடுஞ்செழியன்
கண்ணகி - பாண்டியன் நெடுஞ்செழியன்

ராஜ ரகசியம்:

அந்தபுரம் கணினி மயமாக்கப்பட்டிருக்கும். அரசே கூட பாஸ்வேர்ட் மூலமே நுழைய முடியும் என்பதால் வேறு யாரும் நுழைய முடியாது.

சூப்பர் சுயம்வரம் :

ஐம்பத்தி ஆறு நாட்டு இளவரசர்களும் நேரில் வராமல் வீடியோ கான்பரன்சிங் மூலம் வர, இணையவழியில் சுயம்வரம் அடைந்திருக்கும். செலவும் நேரமும் மிச்சம்.

e-governance மூலம் அரசவையை கூட்ட ஆகும் அனாவசிய செலவை மிச்சப் படுத்தி இருக்கலாம்.

திருவிளையாடல் தருமி
திருவிளையாடல் தருமி

சகுனி பகடைகளை தந்திரமாக நகர்த்தி ஒரு வெற்றி பெற்றிருக்க முடியாது. பகடையாட்டம் கம்ப்யூட்டர் துணையுடன் கண்காணிக்கப்பட்டிருக்கும்.

புலவர்கள் வீட்டிலிருந்தே ஈமெயிலில் மன்னரைப் புகழ்ந்து பாடிய பாட்டை அனுப்பி, ஜிபேயில் அதற்கான சன்மானத்தைப் பெறலாம்.

அசோகவனத்தில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் சீதையை கூகுள் மேப் மூலம் துல்லியமாக கண்டுபிடித்து இருப்பார் அனுமார்.

- ரகோத்தமன்.

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com